பக்கம்:காளிதாசன் உவமைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

காளிதாசன் உவமைகள்


விசுவாமித்திரன் சூரிய காந்தக்கல்; அவனிடம் படைக் கலங்கள் இருந்தன. எனினும், அவற்றை இயக்க அவனால் இயலாது. இராமன் சூரியக் கதிர்; படைக்கலங்களை அவனிடம் அருளியதால் அவை இராமன் ஏவின செய்து நின்றன; அறந்தலை நிறுத்தவும் அரக்கரை அழிக்கவும் ஆற்றல் பெற்றன. ர. 11:21

னிக்காலத்தில் மங்கிய திங்கள் கீழ்வானத்திலும், மாலையில் விழப்போகும் செங்கதிர் மேல் வானத்திலும் காணப்படுகின்றன. பனிமண்டலம் சூழ்ந்துள்ளது. சில மாங்களுக்கு முன்பு மழை ஒய்ந்து, வேனிற்காலத்தில் நீல நிறவானில் திகழ்ந்த முழு, மதியோ இது, என்ற ஐயம் எழுகிறது. இன்றோ செங்கதிர் மறைவுக்குப் பின்னரே மதியைச் செவ்வனே காணமுடியும்.

காமன் மனைவிரதி, ஒளி குன்றி, தன் முகத்தைப் பிறருக்குக் காட்டவும் நாணி ஒடுங்கியுள்ளாள். சிவனுடைய சீற்றம் தணிந்து, அவள் தன் நாயகனுடன் சேரும் காலத்தை எதிர்பார்த்து நாள்களைக் கழிக்கிறாள். கு. 4:46

புட்பக விமானத்தில் சீதையுடன் இலங்கையிலிருந்து திரும்பும் இராமன் துரத்தில் விமானம் வரும்போது, “அதோ சரயூ என் தாய்; என் தந்தையால் கைவிடப்பட்டாள்; துணை அற்றிருந்தாள்; இன்று, குளிர்ந்த காற்றுடன் கூடிய தன் அலைகள் என்னும் கைகளை நீட்டி என் தாய் என்னை அணைக்க விரும்புகிறாள்.” எனச் சீதையிடம் கூறுகிறான். ர. 13:63

ராம இலக்குமணரைக்கண்ட அவர் தாய்மார்கள், கோசலையும் சுமித்ரையும்,பதினான்கு ஆண்டுகள் அவர்களைப் பிரிந்ததால் உகுத்த சோகக் கண்ணிர் வெம்மையானது. இராம இலக்குமணரைக் கண்ட மகிழ்ச்சியால் உண்டான கண்ணீர் தண்மையானது. இமயத்திலிருந்து வந்த பனிநீர் வெந்நீரைத் தண்ணீர் ஆக மாற்றுவது போல, தாய்மாரின் ஆனந்தக் கண்ணீர் சோகக் கண்ணீரைக் குளிர்வித்தது. ர. 14:3

முனையும் கங்கையும் கலவாமல் தனித்தனி நீரோட்டங்களாகச் சிறிது தூரம் செல்கின்றன. பிறகு, ஒளிரும் நீல மணியும் முத்துச்சரமும் போலே, கலந்தும் கலவாமலும், கருநீர்த் துளிகளும் வெண் நீர்த்துளிகளும் தோன்றச் செல்கின்றன. பின்,