பக்கம்:காளிதாசன் உவமைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. காதல்

வெப்பத்தால் வாடிய அரசனையும் ஒளி காலும் மாளவி காவையும் மூத்த இராணி திருமணத்தில் இணைக்கிறாள்.

உள்ளத்தின் நிலைக்களன் உடல்; உடலைவிட்டு உள்ளம் நீங்க இயலாதது. உடலின் வேகத்தைக் காட்டிலும் உள்ளத்தின் வேகம் மிகுதியாயினும் உள்ளம் உடலுடனே இருக்கும். துஷ்யந்தனுடைய உடல் ஒரு திசையில் ஏகுகிறது. அவன் உள்ளமோ அவ் உடலின் வேகத்தோடு காதலி செல்லும் வேகத்தையும் கூட்டி எதிர்த் திசையில் பாய்கிறது.

காதல் தளிர்ந்தது எப்போது? என் கண்களுக்கு அவள் இலக்கானபோது; கண்வழியாக அவளுடைய உருவம் என் மனத்தில் பதிந்தபோது.

காகாதல் அரும்பு தோன்றியது எப்போது? அவள் கை பற்றியது என் மெய் சிலிர்த்தபோது.

இக்காதல் மரத்தின் பழச்சுவையை என்று நான் நுகர்ந்து விடாய் தீர்வேன்? மா. 4:1

னத்தில் உள்ள பெண்ணை அடைந்து இன்புறும் வேட்கைக்குத் தடைகள் பல; அவை வலியன. தடைகளின் வலிமை காதலின் இன்ப வேகத்தை நூறு மடங்கு அதிகப் படுத்துகின்றது.

இப்பெண்கள், உலகில் உள்ள ஆறுகள்; அவற்றின் பிறந்த வீடு, மலைகள்; அவற்றின் காதலன் கடல், ஒவ்வொரு ஆறும், துணை தேடாது, மலையிலிருந்து கடலை நோக்கி விரைகிறது. வழியில், சந்தனக் காடுகளையும் சோலைகளையும் தாண்டி வருகையில் அவற்றால் அணி செய்யப்பட்டு வருகிறது. அலை கள் கடலின் உதடுகள், அவற்றை ஒவ்வோர் ஆற்றுக்கும் தனித்தனியே தந்து, கடல் அதன் முத்தத்தைக் கொள்கிறது. ர:13:9

ங்கை வற்றாத ஜீவநதி, அதன் நீர் எப்போதும் கடலில் பாய்ந்து கொண்டிருக்கும் அந்த நீரின் மனத்தையும் சுவையையும் பருகிக்கொண்டே இருந்தாலும் கடலுக்குத் தெவிட்டுவ