பக்கம்:காளிதாசன் உவமைகள்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

காளிதாசன் உவமைகள்


விரக்கம் கொண்டு, சகுந்தலையின் ஒவியத்தை வரைந்து, அதைக் கண்டு பிதற்றுகிறான், ஆற்றை அணுகியும் விடாய் தீர்க்காமல் கானல் நீரைத் தேடும் பித்தனே போல்வான் அவன்.

சா.6:ጎ6


5. குழந்தை

ங்களகரமான தீபம் அதன் சுடரால் விளங்குகிறது; விண்வெளி ஆகாய கங்கை எனப்படும் வெண்மையான உடுத்திரளால் தூய்மை பெறுகிறது; கல்விமான் நன்கு பயின்ற இலக்கண மரபுக்கு ஏற்ற சொல் அமைப்பால் பொலிகிறான். சொற்களுக்குத் துய்மை மேதகு செயல்களைக் கூறுவதால் உண்டாகும்.

முன்பே உயர்ந்தவன், ஒளிமிக்கவன், தூயவன் ஆக இருந்த இமவானை மேலும் விளங்கச் செய்தாள் உமை. கு. 128


குழந்தையின் அறிவு வளர்ச்சிக்குப் புறச்சூழ்நிலையும் அக நிலையும் வேண்டியுள்ளன.

புறச்சூழ்நிலை குழந்தைக்குக் கிடைப்பது அன்னப்பறவைகள் தாமாகவே கங்கையாற்றை வேனிற் காலத்தில் வந்து அடைவது போன்றது. அன்னம் பகுத்து அறிந்து சாரத்தை மட்டும் பருகவல்லது. வேனிற் காலத்தில் நீரும் வானும் தெளிவுற்றிருக்கும். அவ்வாறு பகுத்தறியும் ஆற்றலும், தெளிவும்,உரியகாலத்தில் வெளியே இருந்து உமையைச் சார்ந்தன.

வ்டதவாதிகளுக்கு இயற்கையாக உள்ள ஒளி இரவில் வெளிப்படும். அவ் ஒளியை யாராலும் மறைக்க முடியாது. அவ்வாறு அகநிலையில் இருந்த புத்திகூர்மை உமை கல்வி தொடங்கும் காலத்தில் ஒளி கான்றது.

கு. 1:30


ழகுத்தெய்வம் நிலவைப் பெற்றது; தாமரையையும் பெற்றது; இரண்டுமே அழகியவைதாம். எனினும், நிலவின் ஒளியில் தாமரையின் மலர்ச்சியை நுகர இயலவில்லையே என அத்தெய்வத்துக்கு ஒரு குறை இருந்தது. உமை தோன்றினாள் அவளுடைய முகத்தில் நிலவி ஒளியையும் தாமரையின் அழகையும் ஒருங்கே கண்டு அத்தெய்வம் தன் குறை நீர்ந்தாள்.

கு. 1:43