பக்கம்:காளிதாசன் உவமைகள்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காளிதாசன் உவமைகள்

21ருதியின் கதிர் பரவுவதால் தாமரை மொட்டு மலர்ந்து விரிகிறது. உமை மங்கைப்பருவம் அடைகிறாள். இதுவரை சதைப் பற்று இன்றி, முயன்று அழகு செய்யவேண்டியதாக இருந்த அவள் உடலின் ஒடுக்கங்கள் மறைந்தன. தசை நிரம்பி, மார்பும் பிட்டமும் சம பாகங்களாகப் பிரிந்து, மெலிந்த இடையும் தோன்றியது. ஒவியனுடைய தூரிகையால் ஒவியம் முழுமைபெறுவதுபோல, மங்கைப் பருவத்தால் உமை அழகின் முழுமை பெற்றாள். புத்திளமையின் கிரணங்களால் அவள் அவயவங்களில் அழகு பொழிந்தது. கு. 1:32


மை தவக்கோலம் பூண்டிருந்தாள்; முன்பு அவள் கூந்தலிலும், காதிலும், கழுத்திலும் அணிந்திருந்த அணிகளால் அவள் முகத்தாமரை பொலிவுற்றிருந்தது. இப்போது சடையாகிய குழலோடு மரவுரி உடுத்துத் தோன்றினாலும், உமையின் முகத்தாமரை சேற்றில் பாசி சூழ்ந்ததாக இருந்தாலும், அதன் அழகு குறையவே இல்லை. கு. 5:9


திலீபன் குழந்தையின் முகத்தழகைத் தன் கண்களால் பருகினான். அவன் கண்கள் காற்று வீசாத காலத்துப் பொய்கையில் பூத்த தாமரை மலர்களைப்போல விரிந்தன. தன் இன்பத்தைத் தன் குடிமக்களுடன் சேர்ந்து நுகர்ந்தான். கடல் முழு மதியைக் கண்டதும் தன் திரைக்கைகளை எடுத்து ஆட்டித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்ளுவதுபோல மக்களுக்குத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்து அவர்களுடன் களிப்பில் திளைத்தான். ர. 3:17


குந்தலை தன் பேரெழிலின் சிறப்பை அறியாத பேதைப் பெண். அவள் துஷ்யந்தனைக் காதலித்தாள். அவன் அரசன் என்பதை அறிந்தபின், அவன் தன்னை ஏற்பானோ, ஏற்க மாட்டானோ, என்ற அச்சம் அவள் மனத்தை வாட்டியது. அவ் அச்சத்தை அவள் தன் தோழிகளிடம் கூறும் போது துஷ்யந்தனே மறைந்திருந்து கேட்கிறான்.

"திருவை பெறுவதற்காகப் பலர் தவம் கிடக்கிறார்கள். அவர்களுக்கு திரு அருள் புரியட்டும், புரியாமல் இருக்கட்டும்; ஆனால், திருமகளே ஒருவனை விரும்பினால், அவள் அவனை அடைவதற்கு என்ன தடை இருக்க முடியும்?”