பக்கம்:காளிதாசன் உவமைகள்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

காளிதாசன் உவமைகள்



இது துஷ்யந்தன் தனக்குள் கூறுவது.

"உன் எழில்வனப்பை நீ இகழ்கிறாய், தன்மை தரும் இள வேனில் கால முழு நிலவினுடைய ஒளியை முன்தானையால் யாரால் மறைக்க முடியும்?" சா.3:13

னிச்ச மலர் மெல்லிது. எனினும், அதில் உள்ள தேனை நுகர வரும் வண்டைத் தாங்க வல்லது; ஆனால் பறவைகளின் பாதங்களைத் தாங்க வல்லதன்று.

களிர் உடலும் அத்தகையதே. காதலனைத் தழுவி ஏற்கவல்லது:ஆனால் ஊன் வாடத் தவம் செய்யும் வெம்மையைத் தாங்க இயலாதது. கு. 5:4

லைகளில் ஆறு தன் போக்கில் ஒடுகிறது; மலை குறுக்கிடுகிறது. என் செய்வது என ஒரு கணம் ஆறு திகைக்கிறது; ஒட்டம் தடைப்படுகிறது; மலையைச் சுற்றியோ, பள்ளத்தில் வீழ்ந்து நிரப்பியோ, ஆறு தன் வழிச் செல்லும்.

மை சிவபெருமானை வலம் வந்தோ, அடியில் விழுந்து வணங்கியோ செல்ல உரியவள். நாணத்தால் எடுத்த காலை எங்கு வைப்பது என்று அறியாமல் திகைக்கிறாள். கு. 5:85

மத்தீயினின்று எழுந்த புகையால் புரோகிதரின் கண்கள் கலங்குகின்றன அவியைக் கையில் ஏந்தி அதை எங்கு இடுவது என அவர் திகைத்திருந்தபோது, அவி கையிலிருந்து நழுவித் தானாகவே ஒமத்தீயில் வீழ்ந்து விட்டது.

ண்வர் கண் மறைந்திருந்த நேரத்தில் சகுந்தலை உரியவரனிடம் சேர்த்துவிட்டாள்; நல்ல கல்வியைத் தக்க சீடனுக்கு நல்கியது போல, இச்சேர்க்கை நல்ல பயன் தரும் எனக் கண்வர் சகுந்தலையை வாழ்த்தினார். சா. 4:3

டநாட்டில் வேனிற்கால இரவு குறுகியது; சூரியன் மறைந்து இருள் சிறிதே பரவியதும், மீண்டும் ஒளி பரவிக் கதிரவன் உதயமாகிவிடுகிறான்; அக்குறுகிய இரவில் விண்மீன் கூட்டங்கள் காணப்படுவதில்லை. மதியும் ஒளி இழந்து தோன்றும்.

ரு உற்ற அரசி உடல் வெளுத்து, முகப்பொலிவு இழந்து, அணிகலன்கள் அன்றித் தோற்றமளிக்கிறான் பொலிவு அற்ற