பக்கம்:காளிதாசன் உவமைகள்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


24 காளிதாசன் உவமைகள்

இந்துமதி சுயம்வரத்திற்குப் பல அரசகுமாரர்கள் வந்திருந் தனர். அவர்கள் வரிசையாக வீற்றிருந்தனர். ஓர் அரசகுமாரனை நோக்கி அவள் வரும்போது, அவள் தன்னை மாலை இடப் போவதாக எண்ணி அவன் முகம் மலர்கிறான்.அவள் அவனைத் தாண்டியதும், அவன் முகம் வாடிப் பொலிவு இழக்கிறது

இந்துமதியின் மேனி சுடர்மணி விளக்கங்கள் எழில் கெடப்பொலிகின்றது. அரசகுமாரர் அரச வீதியில் உள்ள மாளிகைகள். விளக்கு தாண்டியதும் மாளிகையில் இருள் சூழ்ந்தது の 6・67

பசுங்கொடியில் பல வண்ண மலர்கள் பூத்திருத்தல் பகற் பொழுதில் காணத்தக்கது. வானில் விண்மீன்கள் சில இடங் களில் தனித்தும், சில இடங்களில் திரளாகவும், இரவில் ஒளி காட்டுகின்றன.

பரந்த ஆற்றுநீரில் சக்ரவாகப் புட்களும் அன்னப் பறவை களும் அமருகின்றன. அவ்வாறு, உமையின் கரும் பச்சை நிறமுள்ள திருமேனியில் பலநிற மணிகள் குயிற்றிய,பொன்னால் ஆகிய அணிகலன்கள் மிளிர்கின்றன. பொன்னும் மணிகளும் வேறு எங்கோ தோன்றி, உமையை அணி செய்ய வந்தன. கு. 721

திருமணம் நடந்த புதிதில் கணவனோடு இன்னும் பேசிப் பழகி அறியாத இளம் பெண் ஒருத்தி. அவள் தன் கணவனது வீரச் செயலை நேரில் காணும் வாய்ப்புப் பெற்றாள் அதைப் பாராட்ட அவளுக்கு இயற்கையாக உள்ள நானம் தடுக்கிறது.

விண்ணிலிருந்து மழைத்துளிகள் மண்ணில் விழுகின்றன. மண் முகிலைப் பாராட்டுவது எப்படி? மயில்கள் அகவுகின்றன; தோகை விரித்து ஆடுகின்றன; அவற்றால் நில கங்கை முகிலுக் குத் தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறாள் இந்துமதி உள்ளூர மகிழ்ச்சி அடைந்தும், நாணம் மீதுரத் தான் கூற இயலாததைத் தன் தோழிகளின் வாயால் வெளிப்படுத்துகிறாள். の Z69

நிலம் அரசனுக்கு இல்லாள் அரசனுக்கு வயது முதிர்ந்தது; தன் மகனுக்கு முடிசூட்டி அரசன் துறவு மேற்கொள்கிறான். அப்போது, அதே நிலம் புதிய அரசனுக்கு இல்லாள் ஆகி பழைய அரசனுக்கு மருமகள் நிலையில் உள்ளாள்.