பக்கம்:காளிதாசன் உவமைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காளிதாசன் உவமைகள்

25


அந்நிலையில், பழைய அரசன் நிலத்தைத் துறந்த போதும், நிலம் அவ் அரசனை, மருமகள் மாமனாரை வழிபடுவது போல, போற்றிக்காக்கிறது. அவர் உள்ள இடத்தை அலகிட்டுமெழுகி, பூவையும் பழத்தையும் உணவுப் பொருள்களையும் கொண்டு அருச்சிக்கிறாள். அவ் அருச்சனையை மட்டும் இரகு ஏற்றான். அருச்சனையைத் தன் உரிமை என அவன் கருதவில்லை; அதில் இன்பத்தைக் காணவுமில்லை. ர.8:14

லைவனைப்பிரிந்த நங்கை அயோத்தி மாநகரம் இராமன் பதினான்கு ஆண்டுகளுக்குப் பின் திரும்பியபோது அந்நகர மாந்தர் நகரை அணி செய்கின்றனர்; அகில்புகை கமழுகிறது. அப்புகை மாளிகைகளின் கூந்தலைப்போல கரு நிறத்ததாக மேலே எழுகிறது. மேடையிலே வீசுகின்ற பூங்காற்றில் அப்புகை சுருண்டு அயோத்தி நங்கையின் வகிர்ந்த, அறல் துன்னிய, குழல்போல விளங்குகிறது. ர. 14:12

வேனிற்காலத்தில் வெப்பத்தால் வருந்தும் ஆறு இங்கு ஒரு கரையை அடையும்; சற்று தூரத்தில் மறு கரையை அடையும். ஆற்றின் இயல்பு அது.

சூர்ப்பணகை காம வெப்பத்தால் வருந்தி, அது தணிய இராமனையும், இலக்குவனையும் மாறி மாறி அடைந்தாள். குறித்த நாயகனுடன் பொருந்தி வாழ்வது அவள் இயல்பு அன்று; தன் காம விடாயை ஆற்றிக்கொள்ள அங்கும் இங்கும் அலைகிற ஆறு அவள். ர. 12:35

சீதை நிறைமாதச் சூலி தண்டக வனத்தைக் காண அவள் கொண்டிருந்த ஆசையை நிறைவேற்றுவான் போல், இராமன் அவளை இலக்குவனுடன் காட்டுக்கு அனுப்பி அங்கே விட்டுவர ஆணை இட்டிருந்தான். காட்டில் தனியாக அவனிடம் இந்த ஆணையை எவ்வாறு, எச் சொற்களால் அறிவிப்பது என இலக்குவன் ஆய்ந்து முடிவு செய்திருந்தான். ஆனால், அவன் நெஞ்சில் இறங்கிய கண்ணீர் தொண்டையை அடைக்க, இராமனது ஆணையைக் கல்மாரி பொழிவது போல விரைவில் உளறிக் கொட்டிவிட்டான்.

கேட்ட சீதை அவமானம் என்னும் சூறைக்காற்றால் தடியடிப்பட்ட கொடிபோல துவண்டு தன் பிறப்பிடமான,