பக்கம்:காளிதாசன் உவமைகள்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காளிதாசன் உவமைகள்

29


இனி, அரக்கர் குலத்தோருடைய உயிரைக் கொல்லும் துணிவையும் பெற்றான். ர. 11:18

ண்மையை அறியத் தருக்கமுறை இன்றியமையாதது.பல முரண் கருத்துகள் உதிக்கின்றன.அவற்றுள் பெரும்பாலானவை கருத்தின் அகத்துள் பொதிந்துள்ள முரண்பாட்டால் தகர்ந்து போகும்; சிலவே தெளிவுள்ளன, வலியுள்ளனவாக, நிற்கும். அத்தகைய கருத்தை எடுத்துரைப்போர் தம் நிலை, அதற்கு எதிர்நிலை, குறிக்கோளை அடையும் வழி ஆகிய யாவற்றையும் தொகுத்து உரைப்பர். எதிர்க்கருத்தை வலியுறுத்துவோர் தம் நிலை, முற்கூறினோர்நிலை, தம் குறிக்கோளின் சிறப்பு, தம் நெறி ஆகிய யாவற்றையும் தொகுத்துக் கூறுவர். இருவரும் உண்மை காண விழைபவரே. இவ்விரு தொகுப்புகளிலிருந்தும் ஏற்க வேண்டியதை ஏற்று, நீக்கவேண்டியதை நீக்கினால், புதிதாக இணைப்புக் கருத்துத் தோன்றும்.

ராம - இராவண யுத்தம் அத்தகையது. இருவரும் இவ்வாத முறையைக் கையாண்டனர்.ஒருவருடைய படைகளை மற்றவர் வென்றார். வஞ்சனைப்போரில் இறங்கவில்லை. ஒரு படை அழிந்தால் வேறு உயர்ந்த படைகளைக்கொண்டு சாடினர். இருவரும் காலத்தை வீணாக்கவில்லை; பயனில செய்யவில்லை; எண்ணாது துணியவுமில்லை. தம் பகைமைக்கு விரைவில் முடிவு காண்பதிலேயே ஊக்கம் செலுத்தினர். ர. 12:92

டலுக்கு ஒவ்வாததொன்று புகுந்து விட்டது; அதை அகற்ற உடலின் மற்ற உறுப்புகளினின்று வெண் குருதிக் கணங்கள் படையெடுக்கின்றன. அவற்றால் அகற்ற முடியா விட்டால், சீழ் உண்டாகிப் புரை ஒடி, நாளடைவில் உடல் முழுவதும் அழிகிறது.

சீதையின் துன்பத்திற்கு மூளை இராவணன் நெஞ்சில் இருந்தது. இராமனுடைய அம்பு என்னும் மருந்து இராவண னுடைய உடலில் புகுந்து, அவனுடைய நெஞ்சிலிருந்த தகாத ஆசை என்னும் அம்முனையை வெளியேற்றியது. கு. 13:36

குமாரன் அமரர் பதியில் புகுந்த போது அவன் அங்குக் காண்பன: மக்களுடைய கீழ் நோக்கிய கண்களும், ஒளி அற்ற பார்வையும் அழிந்தவனங்களும், கொம்பு ஒடிந்த யானைகளும்,