பக்கம்:காளிதாசன் உவமைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

காளிதாசன் உவமைகள்


புண் உற்ற குதிரைகளும், அச்சு முறிந்து தேர்களுமே, அமரர் நெஞ்சு தாரகனை எண்ணும் போதல்லாம் அஞ்சித் துணுக்குறு தலைக் குமாரனால் சகிக்க முடியவில்லை.தேவர் நகரம் இன்னும் அழகுடையதே; அதைக் காக்கும் திறனைத் தேவர் இழந்து விட்டனர்.

பருவ மங்கை ஒருத்தி அழகானவள். ஆனால், பேடிக்கு வாழ்க்கைப் பட்டு விட்டாள். அவன் அவளுடைய அழகைப் பாராட்டி, காத்து, துகரும் திறன் இழந்து விட்டான்.

அவளுடைய கதியை அடைந்துள்ளது அமராபதி; குமாரனுக்கு இரக்கம் மிகுந்தது. கு. 13:36

8. விலங்கு, ஊர்வன, பறப்பன

நிலத் தாய் நமக்கு உணவு தந்து வளர்ப்பவள்; எல்லையற்ற கருணையும் பொறுமையும் உடையவள்; அவள் அகம் குளிர, மேனி குளிர, மழையும் பெய்தது. மழைநீர் புற்றுக்களில் புகுந்து அங்கிருந்த பாம்புகளை வெளியேற்றி விட்டது. அவை சீறி வருகின்றன. பாம்பின் சீற்றத்துக்கு நிலமா காரணம்?

கைகேயி இயற்கையாகத் தூயவள்; அருளுள்ளம் கொண்டவள்; இராமன் வளர்ந்தது அவள் கையில்; தசரதன் அன்பு மழை பொழிந்தனன் அவள் மேல். ஆனால், கைகேயியிடமிருந்தே இரு நச்சுப்பாம்புகள் புறப்பட்டன; அவை கொடியன; அவை தசரதனைக் கடித்தன. அவற்றின் நஞ்சு அவன் மாயக் காரணம் ஆனது அச் செயலுக்குக் கையேயியா காரணம்? ர. 12:5

'கந்த' யானை கூட்டத்திற்குத் தலைமை பூணுகிறது அவ் யானைக்கன்று, 'களபம்', இளம் பருவத்தது எனினும், மற்ற யானைகளை அடக்கும் திறன் பெற்றது. அத்திறன் அதன் இயற்கை மணத்தால் உண்டாவது.

பாம்புக்குட்டி இளையதாயினும் அதன் நஞ்சு விரைவும் கொடுமையும் உடையது.

அரசன் சிறுவனாயினும் உலகிற்குத் தலைமை பூண்டு மக்களை உயர்விக்கும் திறனையும், அவர்களைப் பகைவரிட-