பக்கம்:காளிதாசன் உவமைகள்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


32 காளிதாசன் உவமைகள்

ெ நற்றிக்கண்ணைத் திறந்த சிவபெருமானால் உமையின் கண் எதிரே சாம்பலாகி வீழ்ந்தான் மன்மதன். பயத்தால் நடுங்கிய உமை கண்களை மூடி மயங்கிக் கிடந்தாள். உமையின் தந்தை யாகிய இமவான் மயங்கிக் கிடந்த மகளைத் துக்கித் தன் தோளில் போட்டுக்கொண்டு, மலைச் சிகரங்களுக்கு இடையில் தன் இருப்பிடம் நோக்கி நடந்தான். அந்தக் காட்சி விண்ணில் உள்ள யானை ஒன்று கீழே இழிந்து, தாமரை மலரை நாளத் துடன் தன் கொம்பிடை ஏந்தி, நீண்ட உட்லோடு, நெட்டடி களை எட்ட வைத்து, தன் வழியே செல்வது போல இருந்தது.

  • கு. 73.9

காட்டில் ஒரு மரம், அருகில் இருந்த கொடி மரத்தில் படர்ந்தது. நாளடைவில் கொடியும் மரப்படையில் வேரூன்றி மரத்தைச் சூழ்ந்தே வளர்ந்தது.

ஒரு நாள் பெரிய யானை ஒன்று காட்டு மரங்களை விளையாட்டாக ஒடித்துத் தள்ளியது. அம் மரத்தையும் வீழ்த்தி யது. அம் மரத்தை அண்டி இருந்த கொடிகளின் கதி என்ன?

ரதி சிவனிடம் கேட்கிறாள்: “காமனை நீ அழித்தது பாதி அழிவே, அவனை அன்றிக் கதிவேறில்லாத என்னையும் அழித் தாலன்றோ அழிவு முடிவுறும்?” கு. 4:31

  • _ 米

சுருக்க - விளக்கம்

கு - குமார சம்பவம் சா - சாகுந்தலம் மா - மாளவியாக்கியும் மே - மேகதூதம் ர - ரகுவம்சம் வி - விக்ரம ஊர்வசியம்