பக்கம்:காளிதாசன் உவமைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

காளிதாசன் உவமைகள்


அரசன் பகைப்புலத்தை வென்று தன் அரசை அங்கு ஏற்படுத்துகிறான். அவன் மக்களின் அன்பையும் மதிப்பையும் ஆதரவையும் பெறு முன்பு, அவனை எளிதில் வீழ்த்தலாம். ஆனால், மக்களுடைய மனத்தில் அவன் வேர் ஊன்றி நிலைத்த பின் அவனை அகற்றுதல் அரிது. மா.1:18

நெற்பயிர் நல்ல விளைச்சலைத் தருவதற்கு நாற்றுகளைப் பண்படுத்தப்பட்ட வயல்களில் நடுகிறோம். நாற்றுகளைப் பிடுங்கி நடுவதால் வளம் உயர்கிறது; குன்றுவது இல்லை. வளர்ந்த நெற் பயிரினிடையே தாமரைகள் மலர்கின்றன. செந் நெற்கதிர்கள் தாமரை மலரின்மீது தாழ்ந்து நெல்மணிகளைச் சொரிகின்றன.

நெல் விளைபுள்ள வங்க நாட்டு அரசர்கள் இரகுவை எதிர்த்தனர். அவர்களை இரகு வென்றான்; கங்கைக்கிளை நதிகளின் இடையில் வெற்றிக்கம்பம் நாட்டினான்; நாட்டைப் புண்படுத்தினான். அங்கு இருந்த அரசர்களை அவரவர் இடங்களிலிருந்து அகற்றி அவர்களுட் சிறந்தவரைத் தேர்ந்து எடுத்து, அவர்களுக்குப் பயிற்சி தந்து, முடிசூட்டி, அந்நாட்டிலேயே நிலைபெறச் செய்தான். அவர்களுடைய ஆளுகையில் நாடு வளம்பெற, அம் மன்னர்கள் தம் செல்வங்களை இரகுவின் அடி மலர்களில் காணிக்கையாக்கினர். ர.4:37

காற்று விரைந்து வீசினால் மரங்கள் ஒடியும்; மிக மெல்ல வீசினால் அவற்றில் அசைவு இல்லாது புழுக்கம் தோன்றும். மென் காற்று மரங்களைச் சிறிதே வளைக்கும்.

அஜன் பிற அர்சர்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டு அவர்களைப் பதவியினின்று நீக்கவில்லை. மிக மென்மையாகப் பழகி அவர்கள் தன் ஆணைகளைப் புறக்கணிக்கவும் இல்லை. ஆனால் அனைவரும் தன் ஆணைக்கு வணங்குமாறு செய்தான். ர.8:9

வன் இளைஞன், இன்பங்களைத் துய்க்கும் பருவம், ஆற்றல், வாய்ப்பு பெற்றவன். அவன் மடியில் இளம் பெண் ஒருத்தி கிடக்கிறாள். ஆயினும் பல ஆண்டுகள் அவளைத் துய்க்காமல் 'கத்தி முனை' (அஸிதாரா) விரதம் மேற்கொள்கிறான். ஒருவன் இளம் பெண்ணுடன் ஒரே படுக்கையில்