பக்கம்:காளிதாசன் உவமைகள்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காளிதாசன் உவமைகள் 7

இருந்தாலும் தம் நடுவே கத்தி வைத்து இருப்பது போல, புலன் அடக்கத்துடன் ஐம்பொறிகளையும் வெல்வது அந்த நோன்பு.

பரதனுக்கு அரசாட்சி தானாகவே வாய்த்தது. அவன் பெற்றது தனி அரசு. உட்பகைபுறப்பகைஎனும்முட்கள் அற்றது. எனினும், இராமனிடம் உள்ள பக்தியால் அதனை நுகராமல் பதினான்கு ஆண்டுகள் ஆட்சியில் கடுமையான அலிதாரா' விரதத்தை மேற்கொண்டான், p. 13.67 தசரதன் பழைய ஆலமரம், பரசுராமன் என்னும் காட்டுத் தீயால், தசரதனுடைய ஆளுகையில் இருந்த பல மன்னர்கள் வீழ்ந்துபட்டனர். புதிதாகத் திருமணம் செய்துகொண்ட மக்க ளோடும் சுற்றத்தாரோடும் அயோத்திக்குத் திரும்பி, வத்து கொண்டிருக்கும்போது, காட்டுத்திபோல் பரசுராமன் அவனைப்பற்றினான்.இராமன் எனும் பெருமழை அவனையும் எஞ்சியோரையும் அத்தீயினின்று காத்தது: இராமன் உருகு தாதையைப்பொழிந்த் பேர் அன்பினால் தொழுது, முன்பு புக்கு இழிந்த வான்துயர்க் கடலினின்று ஏற்றினான்.” p. 11:92 இட்வாகு குலம் என்ற கண்ணாடி உலகனைத்தையும் விளக்கும் கதிரவனிடமிருந்து உண்டானது.மேகமும் சூரியனால் உண்டானதே - வீசிய ஆவி அக் கண்ணாடியில் படிந்தது. கண்ணாடியின் எதிரொளி குறைந்தது.மக்கள் தம் ஒழுக்கத்தைக் காட்டும் கண்ணாடியைப் பார்த்தபோது அதில் இராமனிடம் உள்ள மாசு அவர்களுடைய கண்ணுக்குத் தென்பட்டது.

"துடைத்தால் அம்மாசு போய்விடும்; சற்று நேரம் வெய்யில் அடித்தாலும் அந்தமாக அகலும், ஆனால் அது வரை மாசு படிந்த கண்ணாடியாக இராமன் இருப்பது தகுமா?" இது இராமன் வாக்கு. p. 14:37 நீரில் எண்ணெய் சிந்திவிட்டது; காற்றும் அடிக்கிறது: அலைகள் எழுகின்றன; அலைதோறும் எண்ணெய் பரவித் தோன்றுகிறது.அவ் எண்ணெயை நீரினின்று எடுக்க முடியாது; எடுக்க முயன்றால் அது மேலும் பரவும்.

சீதையைக் குறித்த பழிச்சொல் அயோத்தி.நகரெங்கும் பரவியது, பரவிய பழிச்சொல்லைத் திரும்ப எடுக்க எவராலும் (ipts to fs/ off.