பக்கம்:காவியக் கம்பன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

I O பொற் கோட்டு இமவான் மகளே புவனேஸ்வரி அம்பிகே துர்கா அங்காள பரமேஸ்வரி சங்கரி நந்தினி சவுந்தரி ராஜேஸ்வரி ஓம் சக்தி பராசக்தி உமா மகேசுவரி கங்கா பவானி கெளரி கெளமாரி வான்மாரி பொய்ப்பினும் வரன் மாறி - பொய்க்காத கருமாரித் தாயே காளியே கூளியே ஆரணத்தின் பெரும் பொருளே நாரணர்க்கு இளையவளே ஓங்கார வடிவே ஆங்கார வல்லி ஊங்கார தொனியே ரீங்கார வல்லி கதிராய் நிலவாய் காய்கின்ற ஒளிச்சுடரே காற்ருய் வெளியாய் கனலாய்ப் புனலாய் மணலாய் மலர்ந்த சராசரமே பெண்ணே நின்பெருமை பேசவல்லேன் அல்லேன் எனச்சொல்லும் பொருளும் தொடரத் தொடர உருகினன் உள்ளத்திரையில் உருவகப் படுத்தின்ை. அதுபோது ஒரு கிழவி அங்கே வந்தாள் உலைபொங்கி வழியக் கண்டாள் எரிந்த விறகை வெளியில் இழுத்தாள் வழிந்த சோற்றை வழித்துச் சுவைத்தாள் பொங்கலில் ஒருகல் உப்பு குறைகின்றதே