பக்கம்:காவியக் கம்பன்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I I கம்பனே தொடுகறி உண்டோ எனக் கேட்டாள். திடுக்கிட்டான் விழிப்புற்ருன். யாரடி கிழமே பூசைக்குரிய பொங்கலை எச்சில் படுத்தினை என்று அவள் கையிலிருந்த கலயத்தைப் பறித்தான். நான் கிழம் பழுத்து உதிரும் பருவம் நீபழுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்க வந்தேன். கிழவிக்கு வயிறு பெரிதோ வாயும் பெரிதோ எங்கிருந்து வந்தனை எங்கு போகின்றன? கேளடா கருவூரிலிருந்து வந்த மகனே காட்டுருக்குப் போகின்றேன், இடையில் பாட்டுரில் உன்னையும் பார்த்தேன் என்ருள் மெய்மறந்து அவள் ஒளி முகத்தைப் பார்த்திருந்தான். பின்னர் அன்னையே பொங்கலில்லை. மன்னிக்க என்றபடி மாலையுடன் கருவறைக்குச் சென்ருன் அதிர்ச்சியினும் அதிர்ச்சி அவனை உலுக்கிற்று காளியின் கரத்திலே பொங்கலைக் கண்டான் உதட்டிலே தின்ற சுவடு தெரிந்தது. தன்னை மறந்தான் அவள்தாளில் விழுந்தான் தாரை தாரையாக கண்ணிர் பெருகிற்று. தாயே தாயே என்று வாயும் புலம்பிற்று அபயக்கரம் நீண்டு அவனே வருடிற்று மாகாளித் தாயே மகாமாயை நீயே மாரி என்ருல் மழை என்பார்