பக்கம்:காவியக் கம்பன்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12 மழை என்ருல் ஈரம் என்பார் ஈரமும் கருணையும் இன்றுகண்டேன். தாயே தடுத்தாட் கொள்ள வந்தனையோ உமையே உருக்காட்டி மறைந்தனையே அழுதான் சிரித்தான் ஆடினன் பாடினன். ஆற்று வெள்ளம் உன்மத்த நடையில் வீடு சேர்ந்தான் குடித்து வந்தானென்று கொதித்தாள் மனைவி அன்றிரவு கடல்திரண்டு கார்மேகம் ஆனதோ கறுத்து இருண்டு சோழமண்டலத்தை சூழ்ந்ததோ குமுறிற்று வானம்; கொட்டிற்று மழையோ மழை காவிரி கரைபுரண்டது வீரசோழன் வெகுண்டது. வெள்ளம் பெருகப் பெருக வேந்தனும் வருந்தினன் பயிர்கள் மூழ்கமூழ்க சடையப்பர் தத்தளித்தார். படைமறவர் ஆற்றின் கரைகாத்து நின்றனர் காளியை நினைத்து கம்பனும் குழம்பினன். ஆற்றுப் படுகையிலே என்ஆத்தாள் இருக்கின்ருள் அகிலம் காப்பவள் தன்னையும் காத்துக் கொள்வாள். தவிப்பது மனிதபுத்தி என்றுஒருமனம் சொல்லும்