பக்கம்:காவியக் கம்பன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

14

உப்புக்கடலில் ஓடிக்கலந்த உன்னை
அன்னை என்று உலகம் அழைக்க
கரை கொடுத்து அணை எடுத்து
புகழ் கொடுத்த நன்றி மறந்தனையோ?
தாயொரு பிழைதான் பொறுப்பாள்
தண்ணீர் மூன்றுபிழை தாங்கும் என்ற
சான்றோர் வாக்கும் பொய் ஆனதோ
பொங்கி எழுந்தனையோ? பொறுமை இழந்தனையோ
கன்னியழிந்தனையோ காவல் இழந்தனையோ
சீறிவரும் உனது சீற்றத்தையடக்க
கங்கையைச் சடைமுடித்த சங்கரன் வேண்டுமோ?
சங்கத் தமிழ் மேல் ஆணை
காவிரியே நீ கரையடங்கி
நுரையடங்கி ஒடுங்குக ஒடுங்குகவே
கம்பன் சொன்னேன் காளியும் சொன்னாள்
அடங்குக அடங்குக ஆவேசம் அடங்குகவே
நாடு வணங்கும் நானும் வாழ்த்துவேன்
காவிரியே வாழிய நீ வாழியவே!"
சீறிவந்த வெள்ளத்தின் சீற்றம் தணிந்தது
கரை கடந்த நிலைதணிந்து நடந்தாள் காவேரி.
கரைகாத்த காவலர்க்கு வியப்போ வியப்பு
வேந்தனுக்கு தாங்க ஒண்ணா மகிழ்ச்சி
சடையப்ப வள்ளல் உள்ளம் துள்ளினார்.
பள்ளத்திலிருந்த பயிரெல்லாம் நிமிர்ந்தன.
தார் வேந்தன் தேர்பறந்தது தேரழுந்துார் நோக்கி