பக்கம்:காவியக் கம்பன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

22 வேந்தனுக்கு நிழலாயினர் வீதிகள் கடந்தன. ஊர்க் கோடியில் ஒருகுடில் கன்று குரல் கொடுத்தது உள்வீட்டில் ஆயா மத்திட்டுக் கடைந்தாள் செல்லப் பேரர்கள் வெண்ணைக்குச் சூழ்ந்தனர் நகருங்கள் துமிதெரிக்கும் துமிதெரிக்கும் என்ருள் முகத்தில் தெரித்தால் முத்துப் போலிருக்கும் ஆடையில் தெரித்தால் அழுக்குப் படியும் செல்லங்களைச் சுவைக்க வரும் எறும்புகடிக்கும் நகருங்கள் என்ருள்-நகர்வலம் வந்த கம்பர் புன்னகை பூத்தார். கூத்தரின் விழிகளில் ஆயிரம் கேள்விக்குறிகள் வேந்தனுக்குப் புருவம் வியப்பில் உயர்ந்தது கூத்தர் * மன்னு-கவிராட்சசன் கவுடப்புலவன் ஈட்டி எழுபது எழுதிய கூத்தன் இறந்தான் என்று இரங்கல் பாடுங்கள் மூன்ரும் குலோத்துங்கனே முதற் குலோத்துங்கனுக்கும் நானே ஆசான். முது பெரும் புலவன் இன்று கம்பனுக்கு இளைத்தேன் இளைத்தேன்.' கம்பர் பெருந்தகையே இது என்ன பேச்சு. புரியவில்லை துடுக்காக ஏதும் சொல்லியிருந்தால் - மன்னிக்க' '