பக்கம்:காவியக் கம்பன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 எழுத்தானி பிடிப்பதே என் பொறுப்பு எழுத்தில் ராமனைக் கொண்டு நிறுத்துவது அவளன்பே, குருத்தோலை திருத்தி கூர் எழுத்தானி வடித் து தேர் அழுந்துார் சந்நிதியில் விடுத்துச் | செல்லுங்கள் சரராமனே-தசரதராமன் வருவான் அன்னைபிராட்டியை அனுமனை சந்திப்பேன் வால்மீகியின் திருவருளால் வண்ணத் தமிழ் சித்திரமாகும் அது நேரம் அந்தி விளக்கேற்றினன் அம்பிகாபதி. ஆலய வாசலுக்கு ரதம் வந்து சேர்ந்தது. தந்தைக்குத் தாள் வணங்கினன் தலைதெரிக்கா ஒடினன். அன்னைக்குச் சொன்னன். ஆதித்த உவச்சன் கம்பனின் நலம்கேட்டு களிப்பில் மிதந்தான் முனை முறியாத முள்ளரிசிச் சோறு கிளறிஞ)ள் அவரைக் கத்திரி அவியல் பொரியலாயிற்று. முருங்கைப் பூரசம் மூக்கைத் துளைத்தது. கட்டித் தயிரை வெட்டிஎடுத்தாள். கிவந்த வட்டம் நெற்றிப் பொட்டாக நெறிந்த குழலை நீவி விட்டாள் நெடிய கூந்தலை அள்ளி முடித்தாள் அன்னக் கூடை இடுப்பில் ஏற இடந்தோள் துடித்தது. கமலவல்லி நடந்தாள் கால்கள் அவளைக் காளி கோயிலில் நிறுத்திய து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியக்_கம்பன்.pdf/26&oldid=796806" இலிருந்து மீள்விக்கப்பட்டது