பக்கம்:காவியக் கம்பன்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


26 ஞானியரோ மிகப் பெரியர் ஞாலத்தில் கலப்பதில்லை. யோகிய ரைச் சொன்னல் இறைவனே ஆவார் . மற்றபடி யானறிந்தவரை சொல்லுகின்றேன் இமயத்தின் சிகரத்தில் ஈயம் உருகியதோ வெள்ளிக் குழம்பு பொங்கி வழிந்ததோ வெண்ணிலவு பனியாய்க் கரைந்து உருகியதோ அருவிகள் திரண்டு ஆருய்ப் பெருக்கெடுத் து கங்கை என்ற பெயர்கொண்டு நடந்தது. சரபு யமுனேயும் அதனுடன் கலந்தது. சரயு நதி தீரத்துக்கு சரித்திரப்பேர் கோசலம் அதனை ஆண்டவர்களில் ஆண்டவன் என்பேன் து.ாய்மையில் நெருப்பானவன் துணிவில் புயலானவன் கீர்த்தியில் கதிரவன் கிளர்ச்சியில் சந்திரன் பொறுமையில் பூமி புனி தத்தில் கங்கை. உறுதியில் இமயம் உயர்வினில் நீல வான் சிந்தனையில் ஆழ்கடல் சீற்றத் தில் வேங்கை அறிவினில் தேவகுரு ஆற்றலில் இந்திரன் தருமத்தின் ரகசியம் தெளிவாகத் தெரிந்தவன் சத்தியம் அன்றி வேறு தெரியாதவன் சினத்தை வென்றவன் அழுக்காறு அவனறியாது புலன்கள் அடக்கம் புத்தி அவன் கைவசம் சுக துக்கம் இரண்டிலும் ஒரேசித்தம் ராஜ நீதி முற்றும் கற்றவன். அகத்திலும் புறத்திலும் பகையற்றவன் அழகினில் மன்மதன் அருளினில் திருமுருகன்