பக்கம்:காவியக் கம்பன்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


29 ஆண்மையோ வீரமோ ஆணவமோ நீ மாள்வாய் பிறன்மனை நோக்காத பேராண்மை உனக்கில்லை. என் கண்ணிர் இலங்கையை எரிக்கும் நெருப்படா. வார்த்தைகள் எரிமலையாகச் சிதறின. வெட்கம் என்ற உணர்வறியா மூர்க்கன் அவள் வேதனையைச் சுவைத் தான் ரசித்தான் இராவணன் கூவும் குயிலுக்கு கொக்கரிக்க முடியுமோ? வேங்கைக்கு வெள்ளாடு இரை என்பது இயற்கை எனக்கு நீ இணங்குவது தவிர்க்க முடியாதது. இந்திரன் உலகும் எனக்கு அடிமை அரம்பை ஊர்வசி என் ஆடல் மகளிர் நவ கோள்கள் நான் மிதிக்கும் படிகட்டு பழிக்குப் பழியாக உனைக் கொண்டு வந்தேன் ஆயினும் மலர் கொப்ய நளினம் வேண்டும் மங்கையர் மனம் பறிக்க இங்கிதம் வேண்டும் என்பதால் உன்னை இதுவரை பொறுத்தேன் இனியும் இருதிங்கள் அவகாசம் தருகின்றேன் இலங்கை அரியணையில் இடமுண்டு வருகின்றேன் என்றே வெந்த புண்ணில் வேலிட்டுப் போளுன் ஆடிக் காற்றில் அறுந்த கொடியென