பக்கம்:காவியக் கம்பன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நாலு திசையிலும் நாயகியைத் தேடுகின்ருர் தென் திசைக்கு வந்தவரில் நாளுெருவன் அஞ்சனைக் குமரன் ஆஞ்ச நேயன் வாயு மைந்தன் வானர விரன் ஆணையில் வலிய சுக்ரீவனுக்கு அமைச்சன் அன்னையைக் கண்டேன் அனுமன் என் பேர். ராம துாதன் நான் ராம துரதன் , தெரிந்து கொண்டதைச் சொன்னேன் தெரிந்தவள் 1). வார்த்தைகள் ஒவ்வொன்றும் அமுதம் ஆயின. எழுத்துக் கெழுத்து ராமனைப் பார்த்தாள். இறந்து கொண்டிருந்தவள் பிழைத் து எழுந்தாள். தன் உணர்வுக்கு அவள் வந், பேrது. கள் வெறியில் அரக்கியர் உறங்கிக் கிடந்தனர் மாருதி ஒரு சிறு குரங்காகத் தெரிந்தான். தன்னை வளர்த்து அன்னை முன் வந்தான் தாளில் விழுந்தான் தாயே என்றெழுந்தான் அனுமன் வாளை வல்லவன் காளை வந்த கதையில் தொண்டன் நான் துாதுவனும் ஆனேன் இதோ அண்ணவின் கணையாழி எனத் தந்தான் கண்களில் ஒற்றிள்ை. கணவனைக் கண்டாள். மெய் சிலிர்த்தாள். மிதிலையில் ராமன் வில் முறித்த காட்சி கண்ணில் தெரிந்தது. சீதையின் மனம் சிறகடித்துப் பறந்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியக்_கம்பன்.pdf/34&oldid=796824" இலிருந்து மீள்விக்கப்பட்டது