பக்கம்:காவியக் கம்பன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 அயலிடத்தில் புகழ் கொண்ட வெற்றியினும் பெரிது காலத்தை வென்று காவியத்தில் நின்று தமிழ் கொண்டு உலகாளும் கம்பராமன் திருப்புகழ் அரங்கேற்றம் அழுந்துாரிலிருந்து ஆறை நகர் வரையில் வாழையும் கமுகும் குருத்தோலை மாலையும் வளைவுகள் தோரணமாக வழிஎல்லாம் அழகுசெய்ய புது மணல் பரப்பி பூப்பந்தல் நிழலிட்டு சிற்றடி சிலம்படி செந்தமிழ் குலவையிட கொம்பு தாரை சங்கு முழங்க திக்கெட்டும் அதிர முரசுகள் கொட்டி பட்டத்து யானைக்குப் பட்டு போர்த்தி கம்பன் ஏடுகளைப் பிடறியில் ஏற்றி கொற்றவன் குடைபிடிக்க ஊர்வலம் நகர்ந்தது தொழுத கையினராய் கம்பர் நின்றுவர கூத்தர் சடையர் குணவீரர் புகழேந்தி வரிசைக்குரியோர் ரதங்களை அலங்கரித்தனர் இலங்கையை வென்று ராமன் எழுந்த போது அயோத்தி கண்ட ஆனந்த வெள்ளம் காவிரி நாட்டில் கரை புரண்டது அம்மா மூன்று சங்கமும் திரண்டு ஒன்ருனதோ மூவேந்தர் பேரவையும் ஒன்று கூடிற்ருே ஆறை நகர் அவைக்களம் அமர்க்களப்பட்டது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியக்_கம்பன்.pdf/44&oldid=796847" இலிருந்து மீள்விக்கப்பட்டது