பக்கம்:காவியக் கம்பன்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


43 அந்தப்புர மகளிர் மேல் மாடத்திலிருந்தனர் அரசன் மகள் அமராவதிக்கு அங்கு தலைமை கம்பருக்கும் அவர் ஏட்டுக்கும் கணத்ததோர் சிறப்பு கொலுவிருந்த குலோத்துங்கன் கூத்தரை நோக்கினன் வயதில் பெரியவர் வாழ்த்துரைக்கலாஞர் கூத்தர் நெடுங்கவிதை சொன்ன பெரும்புலவன் கம்பன் நீடு வாழ தெய்வத்தை வேண்டுகிறேன் கலை முரண்படாது கருத்து முரண்படாது உவமை தவருது உண்மை மாருது சொல்லுக்குச் சொல் சுவை மிகுந்து இனிக்க இனிக்க பன்னிராயிரம் பாடுவது எளிதன்று இறைவனின் திருவருள் ராமனின் பெரும் புகழாக ஆயிற்று என்பேன் ஆயினும் ஒரு கேள்வி வழி நூலுக்கு அரங்கேற்றம் வழக்கில் உண்டோ ஆன்ற புலவீர் ஆதாரம் தருக என்றதற்கு கம்பன் எழுந்து நின்ருன் கம்பர் என் எழுத்து மொழி பெயர்ப்பு அல்ல சொல்லுகின்றேன் வடமொழியில் ராமகதை மிகமிகப் பலவே