பக்கம்:காவியக் கம்பன்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


52 அரங்கேற்றம் நின்றதற்கல்ல அவையில் நான் தோற்கவில்லை தெய்வீக நிகழ்ச்சிக்குத் தடையான பாவம் உன்னை வருத்து மென்றே வருந்துகின்றேன் எனவழியும் கண்ணிரால் மகனை நனைத்தார் நான் வருகின்ற வரையில் மகனே உன்னை அழுந்துார் காளிக்கு அடைக்கலம் வைக்கின்றேன். நாளும் நீ விளக்கேற்றி விளக்காக எரிய வேண்டும். பரிகாரம் அதுவே வாழிய மகனே வருகின்றேன் ஆறைநகர் விட்டு அரங்கத்துக்குப் புறப்பட்டார் சோழன் பேரவை சுடர் குன்றிய விளக்கானது அழுந்துார் அழுதது உவச்சன் தேம்பினுன் கம்பரின் மனைத்தலைவி கண்ணிர்க் குளமாளுள் அரங்கன் திருநகரில் பட்டர்களின் படிக்கட்டில் கம்பரின் சுவடிக்கட்டு ஏறி ஏறி இறங்கிற்று அங்கீகரிப்பதற்கு அர்ச்சகர்கள் அஞ்சினர் சர்ச்சைக்குரியதை சரியென்று ஒப்புவதோ சோழன் பேரவை புறக்கணித்த ஒரு நூலை கொள்ளத் துணிவில்லை. இராமசரிதம் வைணவம் என்பதால் தள்ளவும் மனமில்லை. நன்னுால் அலங்காரம் தந்த சமணர்கள் சரியென்று ஏற்கவேண்டும் மேலும் சிவ கணங்களான தில்லை அந்தணர்கள் ஒப்பினுல் நாமும் ஒப்புவோம் என்ருர்.