பக்கம்:காவியக் கம்பன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தாமரைத் தண்டுருண்டு நின்தாள் மலரானதோ நின்சிற்றடிச் சிலம்புகள் என்நெஞ்சில் குலுங்குதம்மா சங்கரன் நின் சவுந்தரியத்தை லகரியாக்கினன் சியாமளேயே உனக்குத் தண்டகம் சொன்னவனுண்டு எழுத்தில் அடங்கா எழுதரிய ஒவியமே நின்பேரழகு மயக்கத்தில் சிவனும் பித்தன்.ஆனல் ஏழைப்புலவன் நான் என்னுவேன் வார்த்தைக்கு வார்த்தை வர்ணிப்பு தனக்கென்று கேட்டிருந்த இளவரசி கிறுகிறுத்துப் போனுள் நின்றிருந்த நிலம் நழுவ சிறகடித்துப் பறந்தான் உடனிருந்த தோழி ஒசையிட மணிய சைத்தாள் உணர்வுக்கு வந்த புலவன் கற்பூரம் ஏற்றினன் அம்பிகாபதி தாயே சரணம் தமிழே சரணம் வாழி மாகாளி வணங்குதும் யாமே வளவர்குலம் ஓங்க அருளுக அம்மே அரசிளங்குமரிக்கு ஆராதனை தந்தான் ஒருவிழி நிலம் நோக்க ஒரவிழியால் நோக்கினுள் அவளழகு மணிக்கரம் அனைத்தது தீபத்தை திடுக்கிட்டாள் தோழி திகைத்தான் புலவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியக்_கம்பன்.pdf/58&oldid=796877" இலிருந்து மீள்விக்கப்பட்டது