பக்கம்:காவியக் கம்பன்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


57 மறுபடியும் சூடத்தைப் பொறுத்து முன்னே வெட்கம் விரட்ட வெளி நடந்தாள் இளவரசி சூடத்தின் சூடு மெல்விரலில் கொப்பளித்தது புரியாத உணர்வு அவளுள்ளத்தில் கொப்பளித்தது சரிந்த கூந்தலை அவள் அள்ளி முடித்தாள் சரியாத அவனுயிரையும் உடன் சேர்த்து அவள்சென்ற திசையில் சென்றதவன் விழிகள் தெரிகின்ற பொருளெல்லாம் அவளாகத் தெரிந்தாள் போர்முனை சோழியப் பெரும்படை தொடர்ந்து நடை போட்டது வெள்ளாறு தென்பெண்ணே பாலாறு கடந்து வடபெண்ணைக் கரையில் வடுகரை வளைத்தது மேலே வானம் அந்திக்குச் சிவக்கும் வேலும் வாளும் உலைக்களத்தில் சிவக்கும் வடுகர் நிலம் உயிரைத்தோற்ற மறவர்களின் மனைக்கிழத்தியர் அழித்த குங்குமத்தால் சிவந்தது குலோத்துங்கன் விழிகள் வெற்றிக்குச்சிவந்தன மன்னன் வடபுலத்தில் போர் நடத்திக் கொண்டிருந்தான் மங்கை அவைக்களத்தில் தமிழ்நடத்திக் கொண்டிருந்தாள் கூத்தர் தக்கயாகப் பரணி படிப்பார் கோதையவள் கோவைக்குப் பொருள் கேட்பாள்