பக்கம்:காவியக் கம்பன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4


பக்தி வெள்ளத்தில் பரவசப்பட்டான்
நாரணனுக்கு நாலாயிரம் தமிழ் என்றால்
நஞ்சுண்டனுக்குத் தேவாரம் பல்லாயிரம்
அண்டை அயலிருந்து வந்து கலந்தவர்.
கொண்டுவந்த தெய்வங்கள் கோடி கோடி
ஒன்றுபட்டதோ உறவுபட்டதோ
ஒருபெருஞ் சமுதாயம் உருவாயிற்று காண்
குறிஞ்சிக்கு ஒரு கிழவன் முருகன் என்பார்
அவன் இளமைக்கு அழகன் கருணைக்கு வள்ளல்
பாலைக்கு ஒருதெய்வம் கொற்றவை என்பார்
அவள் வெற்றித்திருமகள் வீரத்தின் ஒளி விளக்கு
முல்லைக்கு ஒரு தேவன் மாயோன் என்பார்
சீருக்கும் சிறப்புக்கும் பெருமைக்கும் அவனே பெருமாள்
மருதத்தின் தலைவன் வேந்தன் என்பார்
வேளாண்மைச் செல்வம் அவன் விளைவித்ததே
நெய்தல்நிலக் காவலன் வருணன் என்பார்
கடலுக்குக் காப்பு அவனே என்றிருந்த
இலக்கணமெல்லாம் தலைக்கன ஆனதோ

குமரனைக் கொற்றவை பெற்ற மகன் ஆக்கினர்
மாயோனை அவனுக்கு மாமனாக்கினர்
பிள்ளைக்குத் தந்தையாக சிவனைச் சொன்னார்
அந்த சிவனுக்குக் கொற்றவை மனைவியானாள்.
பின்னால்வந்த பிள்ளையார் பெரிய பிள்ளை ஆனார்
இப்படிக்கு எத்தனை எத்தனையோ கற்பனைகள்
கடவுளென்ற சமுதாயக் கதைகளாயிற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியக்_கம்பன்.pdf/6&oldid=1396874" இலிருந்து மீள்விக்கப்பட்டது