பக்கம்:காவியக் கம்பன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 சோழன் புறநானுாற்றுக்குப் புதுநானுாறு கொள்ளச் சென்றிருந்தேன் அக நானுாற்றுக்கு என் மகள் ஆளானளோ இயற்கை முடிக்குரிய குலக் கொடி உடுக்கடிக்கும் படிக்குரியவளோ பகைக்குலத்து வேந்தர் என்னைச் சிரிப்பார் ஊரலர் தூற்றும் பொறுப்பதெப்படியோ கொதித்தது நெஞ்சம் பொறுத்தது பெருந்தனம் அறிவும் உணர்வும் அரசியல் வழிப்பட்டது கம்பர் மகனைக் கடிந்து கொண்டார் கம்பர் நெருஞ்சி பழுத்து கனியானதுண்டோ நெருப்புக் கொழுந்து நிலவானதுண்டோ மன்னவன் மகள்எனக்கு மருமகளோ மகனே பிள்ளை மதியால் பெரும் பிழை செய்து விட்டாய் அழுந்துார் காளிக்கு அடைக்கலம் வைத்தேன் உன் தலைக்கு மேல் படைக்கலம் என்ருல் பொறுப்பனே விதிக்கு விதி எழுதும் வித்தை நானறியேன் புத்திர சோகத்தில் என்னைப்புதைத்தாயே பொறுமினர் உறுமினர் புழுவெனத்

  • துடித்தார்

h

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியக்_கம்பன்.pdf/64&oldid=796889" இலிருந்து மீள்விக்கப்பட்டது