பக்கம்:காவியக் கம்பன்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தனிமையில் வேந்தனைக்கண்டு தலைகுனிந்து நின்ருர் வேந்தனும் ஆய்ந்து தெளிந்து அறிவுறுத்தினுன் சோழன் இளமையும் இயற்கையும் செய்த பிழையோ பெரிது சரித்திரப் பழுதை தாங்குமோ என் இதயம் தண்டனை என்ருல் தவறு அம்பலம் ஆகும் நாடு கடத்துவதற்கு நிகரான பயணம் வாரங்கல் நாட்டுக்கு துரதுவன் ஆக்குவோம் பார காவியத்துக்குப் பரிசு அதுவே என்ருன் கம்பரும் இறந்தவன் பிழைத்தேன் என்ருர் அடுத்த நாள் பேரவையில் அம்பிகாபதிக்கு எதிர்பாராத ராஜ மரியாதை-அதிர்ந்தான் முத்திரைக் கோலும் ஒலைச்சுருளும் பரிவாரம் சூழ படையும் கொடுத்து வாரங்கல் நாட்டுக்கு வழியனுப்பி வைத்தனர் தந்தை சதி புரிந்தா ரென்று தத்தளித்தாள் அமராவதி கயல் விழி பழுத்து கனல் விழி ஆனதோ தென்றலும் சுட்டது தேன் நிலவு எரித்தது உள்ளம் புழுங்கிப் புழுங்கி உன்மத்தமானுள் காவிரி கொள்ளிடம் காவதம் கடந்து வெள்ளாற்றுக் கரையில் விரித்தனர் கூடாரம் தள்ளாடு மனமும் தளர்ந்த உயிருமாக இருப்புக் கொள்ளாமல் இருந்தான் இளம்புலவன் - гт. s.— 5