பக்கம்:காவியக் கம்பன்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 அதற்கு மேல் சொல்ல எனக்கு வாயில்லை கம்பரைக் கேளுங்கள் கதைக் கட்டும் என்ருன் கம்பரோ மகனே மகனே என்று புலம்பினர் மற்றதற்கு மேலொன்றும் பேசத்தெரியவில்லை கூத்தர் எழுந்தார் கும்பிட்டார் நின்ருர் கூத்தர் மன்னவன் என் மாணவன் மானம் பெரிதென்கின்ருன். கம்பர் மகன் மன்மத ராகம் பெரிதென்கின்ருன் ராமகதை சொன்னவன் புத்திரசோகம் பெரிதென்கின்ருன் நான் கிழவன் நீதியிலும் கருணை பெரிதென்கின்ருன் நல்லோரே பெரியோரே நானும் ஒருவரம் கேட்கின்றேன் முன்னேய நியதி என்று முடிவெடுத்து அம்பிகாபதியை கொலைக் களத்துக்கு அனுப்புவது தமிழைக் கொல்லுவதென்பேன் மறுப்பவர் உண்டோ முன்னம் ஒருகடல் வெள்ளம்முத்தமிழைக் கொன்றது அகத்தியம் வியாழமாலை களரியாவிரை இழந்தோம் இன்று காவியம் தந்தவன் குலத்தை இழப்பதோ உள்ளம் உருகிற்ருே ஊன் உருகிற்ருே உணர்வு - o கசிந்ததோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியக்_கம்பன்.pdf/68&oldid=796897" இலிருந்து மீள்விக்கப்பட்டது