பக்கம்:காவியக் கம்பன்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


5 எழுத்தாணி விளையாட ஏடு கொள்ளா புராணங்கள் தத்துவங்களே உள்ளடக்கித் தாளமிட்டன இத்தனைக்கும் இடையில் பக்தி என்ற படிக்கட்டில் ஞான விளக்கெடுத்து தவக் கோலூன்றி இலக்கியச் சோலையிலே கற்பனைத்தோகை o விரித்து களிநடம் புரிந்தான் காவியக் கம்பன் சரித்திர பின்னணியில் சாத்திர நிழலில் இலக்கியச் சுவட்டில் ஏகே வேலன் எழுது கிறேன் கவிகளில் பெரியோன் கம்பனுக்கு மேவில்லை. நாயகரிற் பெரியோன் ராமனுக்கு மேவில்லை. எழுத்தில் இனிமை தமிழுக்கு மேலில்லை. கம்பனின் கழலடிபணிந்து அவன் கதையைச் சொல்லுகிறேன்.