பக்கம்:காவியக் கம்பன்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


70 நம்பியும் பாடத் தொடங்கினன் சொல்லும் பொருளும் தொடரத் தொடர யாப்பும் அணியும் காப்புக்கு வந்தன வாஞர்ந்த பொதிகையிலே வளர்ந்த தமிழ்மகள் நாவார்ந்த புலவனுக்கு நடம் புரிந்தாள் வேதாந்த சித்தாந்த விளக்கங்களை எல்லாம் விளையாட்டுப் பந்தாக ஆடினன் இளங்கவி தோகையவள் பூரித்தாள் தோளிரண்டும் o துள்ள பாட்டுக்கு ஒரு மலராக எடுத்தான் தொடுத்தாள் ஒன்றிரண்டு மூன்று நான்கென்று தொன்னுாறைத் தொட்டதற்கு துள்ளிற்று கம்பர் மனம் கூத்தர் மனம் குதித்தது கொலையிலிருந்து o மீட்டோமென்று இன்னுமொரு பாட்டுக்கு இருப்புக் கொள்ள வில்லை அவளுக்கு காப்புச் செய்யுளையும் கணக்கில் எடுத்து விட்டாள் நூறு முடிந்ததென்று சபையதிர வந்து நின்ருள் மன்னவனை வென்று விட்ட மயக்கத்தில் மங்கையவளை பெற்றுவிட்ட கிறக்கத்தில் தன்னை மறந்தான் தலையலங்காரம் புறப்பட்டதென கொலையலங் கோலத்துக்குப் பாடி விட்டான்