பக்கம்:காவியக் கம்பன்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கா வியக் கம்பன் வாழ்த்துரை குடகு மலை சிகரத்தில் குளிர்ந்த வனச் சாரலில் கவேர முனிவன், தவமிருந்த குகையருகில் குறிஞ்சி மகள் பெற்றெடுத்த சிற்றருவி பிறந்த இடப் பெயரால் காவேரிஆேைளா? புகுந்த இடமெங்கும் சோலை விரிந்ததால் காரணப் பேராக காவிரி யானுளோ? பொன் விளையும் கன்னடத்து புனித மண்ணில் புரண்டு வந்த படியால் பொன்னி யானுளோ ஏமவதி அமராவதி கபிணை பவானி என்றுபல நதிகள் ஒன்று திரண்டு பொங்கி வரும் போது கங்கைக்குத் தங்கையவள் பூமகளுக்கு இயற்கை அளித்த பெருஞ்செல்வம் தமிழ்த்திரு நாட்டுக்கு வணங்கும் தெய்வம் அன்னை காவேரி வாழிய வாழியவே! தலையரங்கம் தலக்காடு கருவூர் உறையூர் தஞ்சை பழையாறை பூம்புகார் நகரங்களில் வல்லரசுகள் வளர்ந்திருந்த வரலாறு மிகப் பெரிது காவிரியின் இரு மருங்கும் சிவனும் திருமாலும் கோயில் கொண்ட கோபுரங்கள் இன்றுமுண்டு