பக்கம்:காவியக் கம்பன்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


7 சைவம் மணக்க வைணவம் இனிக்க புத்தம் சமணம் கமழக் கமழ தமிழ் வளர்த்த காவிரி வாழியவே. வழிமுறை உரித்த புலியை தரித்தான் சங்கரன். உயிர்ப்புலியை வாகனமாய் வரித்தாள் சங்கரி வரிப்புலியைக் கொடியுடையார் எங்கள் சோழர் விண்ணரசுக்குப் பரிந்து போர் முரசுகொட்டி வானெடு சென்று வாகை சூடி தியாகர் எழுவரைப் பரிசு கொண்ட முசுகுந்தன் எங்கள் சோழர்குல முன்னவன் ஆரூரில் அதிர்ந்த மணிஒசைக்கு அரசிளங் குமரன் வீதி விடங்கனை தேர்க் காலில் அரைத்த மனுவும் ஒரு சோழனே ஒரு புறவின் உயிர் காக்க தன்தசைக்கொடுத்த சிபிச் சக்கரவர்த்தி சோழர் குலத் தோன்றலே பட்டினப்பாலைக்கு பாட்டுடைத் தலைவன் காவிரிக்குகரை எடுத்து கல்லணை தேக்கிய மாவளவன் கரிகாலன் மாண்புமிகு சோழன் இலங்கை கொண்ட கோப்பர கேசரி தஞ்சைக் கோயிலெடுத்த சரித்திரப் புகழுடையான் பாஜராஜன் சோழர் குல திலகமே