இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நீரும் காற்றும் ஒளியுமிலா நிலத்தின் உந்திப் பிலந்தன்னில் பாரின் சுமையை முதுகேற்றிப் பற்.ல பற்பலப் பல்லாண்டாய் ஆரும் அறியாக் கடுந்தவத்தில் அழுந்திக் கிடக்கும் கரித்துண்டு நீறிக் குமைந்து கனிந்தொருநாள் நெஞ்சம் கவரும் மணியாகும், துன்பக் கனறையின் வேதனையில் தொடங்கும் தொலையாத் துயர்தாலும் பின் பொரு நாளில் முடிவெய்திப் பெறுமோர் கவிதை ஒரு முத்து! - இன்பில் தொடங்கி இதயத்துள் என்றே புகுந்த ஓரெண்ணம் பின்பொரு துயருக் கானாகிப் பிறக்கும் கவிதை ஒரு குழவி? முன்பும் பின்பும் இல்லாது - முதலும் இடையும் கடை..பாவும் துன்பே சுமந்து தவம்நோற்றுத் தோற்றும் கவிதை மாணிக்கம்! முன்போ பின்பே, இடைநிலையோ, மூன்றும் கலந்த முழுநிலையோ, அன்பே இன்பின் தொடக்க நிலை! துயரம் இன்றேல் கவிதையிலை) கா-?