உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியப்பரிசு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188- பாட்டு வரும்! மழை காணாப் பயிர்போலே உயிர்க்கவிதை வேட்டிருந்த ரசிகர்குழாம் விரதம் வெல்லும்! பார்க்கின்ற இடமெல்லாம் பகை சேர்ந்தால், நெஞ்சம் வேர்க்கின்ற பயத்தாலே வெலவெலத்தால், வாழ்க்கை நீர்க்குமிழி ஆமென்னும் நினைப்பு வந்தால், கண்ணீர் வார்க்கின்ற கதி வந்தால், வாதையுற்றால்-- - . . உருக்கு வார்த்தைகளில் பாட்டு வரும்; வாய்வீச்சில் பயம் பதுங்கும்! சீர்த்தமிழர் கவிவேண்டிச் செய்து வந்த தவமெல்லாம் தீர்த்து விடும்! ஆங்காரத் தீ பறக்கும் கவிதை கண்டு ஆர்த்தெழுவார் ரசிகர்குழாம்! அதிருஷ்டம் வெல்லும்! நிதி சேர்ந்தால், தரித்திரத்தின் நிலை குலைந்து, தலையெழுத்தின். விதி மாறி வருவாயில் - வீக்கம் கண்டால், பையில் புதிதாகக் காசு பணம் பொல பொலத்தால், நெஞ்சில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/110&oldid=989596" இலிருந்து மீள்விக்கப்பட்டது