பக்கம்:காவியப்பரிசு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்நேரம்- மாலை பிளந் தென்றல் மந்த நடை பயின்றும் நீலவண்டு வானலையில் நிலையற்று நீந்தி வந்தும் கோல இதழ்விரியா. . கூட்டுக் களியுணரா, சூலறியா, காமச் சுவையறியா வெண்முகையாய் -- வெட்டி எடுத்த எழில் மேனி நலத்தோடு பட்டை இடித்தறியாப் பருவயிர மணியினமாய்~. ஆக்வாய்ப் பற்களிலே அகறபடாச் செங்கரும்பாய்-- மெது 12ணலின் திரைநீக்கி மெல்ல முகங் காட்டும் புது முளையாய்-- மெல்ல நடை பழகி . மெட்டி குலுங்கலுங்கும் செல்லச் சிறுநடைக்குச் செகத்தை விலை பேசி, படமெடுத்துப் படமிறக்கும் பாம்பைப் போல், நின்பாதத் தடமெடுத்து, தடமளந்து தலைகவிழ்ந்து ஆலயத்து வாசவிலே நீ வந்தாய்! . வந்தவுனைக் கண்டவுடன் ஊசலிடும் நெஞ்செல்லாம் உவகைப் பெருக்சு, றப் பாசவலைக் கண்ணியிலே பட்டு விட்டேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/117&oldid=989769" இலிருந்து மீள்விக்கப்பட்டது