உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியப்பரிசு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்று முதல்- வாசப் பனிமலரில், வட்ட நிலாத் தேனமுதில்: வீசி விழும் வெள்ளருவி விந்தைக் கலகலப்பில், வானக் குளத்தோடும் மீனக் குலத்துடிப்பில், நோக்கும் இடமெல்லாம் நின்னுருவின் பொன்னெழிலே பூக்கும்; ஒவிசிதறும்; . புன்னகைக்கும் தூக்கத்துச் சொப்பனத்தில் நின்னுருவம் சொகுசுக் கதனத பேசி அற்ட* சுகம் காட்டி அலக்கழிக்கும்! பாவலர்கள் செஞ்சொற் கவியழுதால் செய்த கவிதையெலாம் நெஞ்சைக் குளிர்வித்து நினைவைக் கலையாக்கும்! உன்னுடைய- கன்னக் குழிச்சுழிப்பில் காவியங்கள் கற்றறிந்தும், மின்னல் விழி வீச்சில் மேதினியைத் தானளந்தும், நலம் புனைந்த மேனியெழில் நளினத்தில், நின்பாதச் சிலம்பலம்பும் பண்ணொளியில் சீர்ப்பரதம் கற்றறித்தும், பாசப் பயிர் வளர்த்தேன்? பகற் கனவுச் சோபனத்தில் , நேசம் வளர்த்துன்னை - , - நெஞ்சிற் கலந்துவந்தேன்!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/118&oldid=989756" இலிருந்து மீள்விக்கப்பட்டது