பக்கம்:காவியப்பரிசு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொல்லாக் கருவிழியின் யுத்தொளியும் புன்னகையும் அல்லாப் பொருள் பலவும் கற்பித்து, சொல்லுக்குள் நில்லாப் பொருளனைத்தும் நெஞ்சுள் இனம்காட்டி எல்லாம் எனக்குபார்த்தி - இதயத்தைக் கூட்டியபின் பேச்செதற்கு? நம்மிடையே பேச்செதற்கு? ஆசை மனமறிந்து அருகில் நெருங்கிய பின், பேசும் இதழ் நான்கும் பேச்சிழந்து பிணைந்திறுகிப் பூசிப் பொருந்திய பின், பூட்டிட்டு முடிய பின் பேச்செதற்கு? நம்மிடையே பேச்செதற்கு? மாலான நம்மிருவர். . . மானிடமும் மனங்கய்த்து பாலொடு நீர் சேர்ந்ததெனப் பரவசத்தை எய்திடுங்கால், காலமொடு தாரமெலாம் கணக்கிறக்கும் கணப்பொழுதில் தூலமொடு சூக்குமமும் துரிய நிலை பெற்றிடுங்கால், சத்தின்றிச் சித்துமிலாச் சடமின்றிச் சீவனிலாத் தத்துவத்தின் மெய்ப்பொருளைத் தாமே நாம் உணருங்கால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/127&oldid=989760" இலிருந்து மீள்விக்கப்பட்டது