உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியப்பரிசு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்துவித மாய்த்தோற்றும் ஆலாந்த சாகரத்தே முத்துக் குளித்தடைந்த மோன லயசுகத்தில் - சித்தம் களித்துவக்கும் சித்துவித்தை கற்றபின்னால், வித்தாரப் பேச்சும் ' வெறும் பேச்சும் நமக்கெதற்கு? பொன்னைக் குகையிட்டுப் புடமிட்ட வாறது போல் உன்னுளமும் என்னுளமும் உருகிக் கலந்த பின்னர், தன்னையே நாமிழந்து தாமாகி விட்டபின்னர், என்னென்றும் உன்னென்றும் ஏதுமிலா தானபின்னர், ' - உன்னில் எனைக் கரைத்து ஒன்றுழிலே னாகிவிட்ட பின்னர் நமக்குள்ளே பேச்செதற்கு? பேசடி நீ! பின்னர் நமக்குள்ளே " பேச்செதற்கு?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/128&oldid=989759" இலிருந்து மீள்விக்கப்பட்டது