நினைத்து நினைத்து... நினைத்து நினைத்து எனது உள்ளம் உருகுது --- நெஞ்சை நனைத்து நனைத்துத் துயர வெள்ளம் பெருகுது- நாம் தனித்துத் தனித்து நினைத்து நினைத்து இருந்ததும் பின்னர் தயங்கித் தயங்கி இருவர் மீனமும் , உதரிந்ததும் - நெஞ்சம் இனித்து இனித்துப் புதிய இன்பம் பிறந்ததும்-அதில் இணை ந்து இணைந்து உலகம் யாவும் மறந்ததும்-இன்றும் நினைத்து நினைத்து எனது உள்ளம் உருகுது-நெஞ்சை நனைத்து நனைத்துத் துயர வெள்ளம் பெருது - 2 பதித்துப் பதித்துப் பார்த்த நிலையை மறப்பதோ?-உனைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்த நினைவைத் துறப்பதோ?- திந்தம் துதித்துத் துதித்துத் தொழுத சிலை யை உடைப்பதோ? ' - நெஞ்சைத் துளைத்துத் துளைத்துப் புகுந்த அன்பைத் துடைப்பதோ? . நினைத்து நினைத்து எனது உள்ளம் உருகுது-நெஞ்சை நனைத்து நனைத்துத் துயர வெள்ளம் பெருகுது -நீ சிலிர்த்துச் சிலிர்த்து மகிழ்ந்ததும் ஓர் மாயையோ?-கன்னம் சிவந்து சிவந்து மலர்ந்ததும் ஓர் மாயமோ?- ெநஞ்சில் தளிர்த்துத் தவிர்த்து வளர்ந்த காதல் மாயுமோ?- 'நித்தம் தவித்துத் தவித்துப் புலம்பும் இதயம் ஓயுமோ?-இலத ' நினைத்து நினைத்து எனது உள்ளம் உருகுது-நெஞ்சை நனைத்து நனைத்துத் துயர வெள்ளம் பெருகுது-உன்னை...
பக்கம்:காவியப்பரிசு.pdf/135
Appearance