உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியப்பரிசு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலவடிக்குது வெளியிலே! : நில வடிக்குது வெளியி லே-அதன் நிழ லடிக்குதுன் விழியி லே! சிலை வடித்தவடி வழகி லே கலை : சிற கடிக்குதுன் ஒளியி லே! பூவி. ருக்குது (பொழிலி லே!-அதன் பொலி விருக்குதுன் எழிலி லே! . காவி யத்தொடும் ஓவி யம்பொருள் கண்டு நிற்பதுன் நிழலிலே! தேனி நக்குது பூவி லே? - சுவை : தேங்கி நிற்பதுன் நாவி லே! மானி ருக்குமிரு மீனிருக் கும் கரு மையி ருக்கும்விழித் தீவி லே! அன்பி ருக்குதுன் அகத்தி லே!-அதன் அருளி ருக்குதுன் முகத்தி லே! துன்பு அம்மனம் இன்பு ரத்தினம் துடி துடிப்பதுன் சுகத்தி லே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/136&oldid=989782" இலிருந்து மீள்விக்கப்பட்டது