இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இளிடம் இதுவே நிலையானால். இது இரவைக் காணேன்! என்றாலும் ஏனோ ஒளியை நான் காணேன்? இருளைக் காணேன்! என்றாலும் - ஏனோ வழியை நான் காணேன்? அலையைக் காணேன் என்றாலும் ' அலைப்புற் றேனோ ஆழ்கின்றேன்? அனாலைக் காணேன்! என்றாலும் ஐயோ! நானேன் வேகின்றேன்? புயலைக் காணேன்! என்றாலும் ஏனோ பொடிந்து வீழ்கின்றேன்? புகையும் காணேன்! என்றாலும் ஏனோ திணறிப் போகின்றேன்? கடலைக் காணேன் . என்றாலும் கரையை ஏனோ நாள்காணேன்? கணையைக் காணேன்! என்றாலும் அகத்தே காயம் ஏன்பட்டேண்? தனிமை என்ப திதுதானோ? தவிப்பின் பொருளும் அதுதானோ? இனியும் இதுவே நிலையானால் எவ்வா றுய்யப் பெறுவேனோ?