இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பூவே பூ -- - உம் பூவே பூ! பொன்னிறப் பூ! பூவையின் முகத்தில் எத்தனை பூ! கண்கள் இரண்டும் குவளைப் பூ! --அவள் கன்ன யிரண்டும் ரோஜாப் பூ!-- பண்கள் 'மிழற்றும் செவ்விதழ்கள்- அவை பரவச மூட்டும் மாதுளம் பூர் தண் ஜூலம் முகமோ தாமரைப்பூ!-அவள் நாகி யழகோ. எள்ளின் பூ? கண்ணைக் கவரும் வெண்ணிறப் பற்கள் கட்டுக் குலையா முல்லைப் பூ? . மலரினைத் தேடி வண்டோடும்!- நறும் மதுன்னை நாடி உண்டாடும்! - அந்த நிலையினில் என் மனம் திண்டாடும்'-அவள் நேசத்திலே களி கொண்டாடும்! கா-3