உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியப்பரிசு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படைக்கல வலியிலோம்; பகைவன் முன்பு நாம் அடைக்கல் மாவதை யன்றியோர் வழியில்லை! ஆயிரம், கவலையை ஆற்றிடும் தமிழ்த்தேன் பாய்ந்திடும் நின்னுடைப் பாடல் கேட்டுளம் இன்புற எண்ணினேன். என்னுளம் மயக்கு 2 அன்பனே! பல்சுவை அருமையும் வாய்த்த நஜ் கயினைச் சாற்றியென் கவலை மாற்றுவாய் க ஜீவா அலன் : புவியினை ஆண்டிடும் புரவல! கவிச்சுவை தன்னிலே நீகொளும் தணியா வேட்கை8ை முன்னமே அறிகுவேன். எனினும், மூன்டெழும் பகையிலை முடிக்கு முன் பாடல் கேட்பதோ? நகையரோ உலகினர்? நாட்டைக் காத்திடும் கடமையில் முதற்கண் கவலைகொள். பின்னஞன் படைமுகம் தன்னில்யான் பரணி பாடுவேன்! நாட்டை , நகரினை, நாட்டின் மக்களை' '. வேட்டை யாடுமோர் வேட்கையன் வேங்கையின் போர்வெறி தன்னை நீ பூண்டோ டறுப்பையே தாருங் காவியம் உன்மேற் பாடுவேன்! அன்னியன் கைபட அனுமதி யாது நம் பொன்னிலம் தன்னை நீ போரில் புரந்துயர் வென்றியந் தோளொடு மீளும் பாதையில் குன்றெனக் கவிமலர் குவியப் பாடுவேன்! இரகுணன் ! நன்னுரை செய்தனை நாவல்! ஆண்டினில் என்றனைக் காட்டிலும் இளையன் நீ எண்ணிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/14&oldid=989513" இலிருந்து மீள்விக்கப்பட்டது