பக்கம்:காவியப்பரிசு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றெனை வென்றவன் நீயே! யான்இனிக் கன்றிலேன்! கவல்லேன்! கடமை ஆற்றுவேன்! சேவகன் : மன்னவா! மன்னவா! சேகுலன் : யாரடா வந்தவள்? என்ன நீ கொணர்ந்தனை? இயம்பு சீக்கிரம் புறமதிற் காவலைப் புரியும் வீரரில் ஒருவன்தான் மன்னவ! உடைந்தது புறமதில்! வேங்கையன் போர்ப்படை வெல்லற் கரியதாம் வீங்குபேர் வெள்ளமாய் விழைந்திங் குற்று நம் நாட்டுள் புகுந்தது நாசம் விளைத்தது! கோட்டை தகர்ந்தது! கொடிமரம் சாய்த்தது! - போதும் உன் புலம்பல்! நிறுத்தடா! போரில் ஏது தான் நேரினும் இதயம் கலங்கிலேன்! 4.கைவனை எதிர்த்திடப் பயந்திலேன்! பாருளோன் நகைத்திட அவனடி நாணிப் பணிகிலேன்! போர்ப்பறை அறையுமின்! போர்முனை செல்லுமின்! நேர்ப்ப.. எதிரியைப் பொருதே இல்லுமின்! கொல்லுமின் எதிரியர் குழுவெலாம்! அவர்தி ஓம்! வெல்லுமின்! வேங்கையை வீழ்த்துமின்! யானுமே செருமுகம் நோக்குவேன்! சிந்தை சோர்கிலேள்! வருவது வரட்டுமே! வருக போர்! வருக போர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/15&oldid=989512" இலிருந்து மீள்விக்கப்பட்டது