பக்கம்:காவியப்பரிசு.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர்வீரர்கன் வாழ்த்துரை: (ஒவ்வொருவரும் ஒவ்வொரு வரியாக) வென்றியை எய்திய வேங்கையன் வாழ்க! இன்றென அவன் புகழ் என்றும் வாழிய! : வாழிய வாழிய எங்கோன் வாழிய! ஊழி பெயரினும் வாழிய! வாழிய! காட்சி-3 - வேங்கையன் அமைச்சன்

  • கவிவாணன்

போர்வீரர்கள் வேங்கையன் : (வேறு) கார்முகிலக் கிழித்தெறியும் ககன மின்னல் கதிரெனவே வாள்வீசீக் களத்தில், இன்றைப் போர் முகத்தில் சமராடி வென்றி தேடிப் போந்திட்ட வீரர்களே! உமக்கென் நன்றி! 'பல நாளாய் வரகுணனைப் பகைத்து நின்றேன். பகைமுடித்தே அன்னவனைச் சிறைசெய் தென்முன் தலைகுனியா லைத்திட்ட என்றன் தானைத் தலைவர்களே! உமக்கென்றன் நன்றி! நன்றி. போர் வீரர்கள் : (ஒவ்வொருவரும் ஒவ்வொரு வரியாக) வேங்கையனெம் மன்னர்பிரான் வீரம் வாழ்க! வென் றணித்த வாகைமலர். ஆரம் வாழ்க! ஓங்குபுகழ் வேங்கையன்தன் நாமம் வாழ்க! உலகனைத்தும் அவன் புகழே ஓதி வாழ்க!