பக்கம்:காவியப்பரிசு.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புவியாகும் நன்னாவனே! குயிலைக் கூண்டில் போட்டி கடைத்துப் பாடென்னல் பாடப் போமோ? கவிவாநீ கேட்கின்றாய்? மன்னா! எங்கும் கூட்டளைக்குக் கீழ்ப்படிந்தோ கவிதை பொங்கும்? பாவலனே! நீ என்றன் கைதி; நானோ உதிரFF 16நம் பேரரசன்! பார்த்துப் பேசு! ஆவலிணைப் பூர்த்தி செயக் கேட்டால், இந்த ஆணவமோ? ஈதென்றன் ஆணை! பாடு! பாடுவதா மன்னவனே? எதை நான் பாட? , பலகண்டு, வந்தெங்கள் நாட்டின் மக்கள் வீடுகளைச் சூறையிட்டுச் சுடுகா உடாக்கி, வீரர்களைப் போர்க்களத்தே வெட்டிச் சாய்த்தால்!' போதனைப் பிரிந்தலறும் அன்றில் போலே பெண்டிரேல்லாம் கணவர்தமைப் பிரிந்து சாம்பி o எடுதற்கு வழிவகுத்தாய்! அவர்தம் வாழ்வின் 1. மங்கலதன் நாண்கயிற்றைப் பறித்தாய்! தேய்த்தாய்! கூடுவிட்டுப் பறந்தறியாக் குஞ்சைப் போன்ற குதலை மொழிச் செல்வத்தைக் கொன்றாய்! செந்நெல்' ஆடு நின்ற வயல் முழுதும் அழித்துத் தீய்த்தாய்! ஆலயத்தைப் போய்விடுதி ஆக்கி மாய்த்தாய்? பாடுவதா மன்னவனே? எதை நான் பாட?