பக்கம்:காவியப்பரிசு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோக்கையன் : மயங்கிலனோ? அடிச்சன் : ஆம். அரசே! இயங்கி லாதான். வேங்கையன் :: . வசப்படுத்த என்னென்ன முயற்சி செய்தீர்?' அழைச்சன் : LAலைபோலே பெருஞ்செல்வம் தருவோம் என்றேன்;- மாணிக்க அபிஷேகம் செய்வோம் என்றேன்; துலைபாரம் ஏற்றியவன் எடைக்கு முத்தும் தாயமணி வகபலவும் நிறுப்போம் என்றேன்; பாடுகின்ற பாடல்வரி ஒவ்வொன் றுக்கும் பசும்பொன்னிற் பந்துருட்டி மகிழ்வோம். என்றேன்; மாடுமனை மாளிகையும், செந்நெல் விம்மும் வயற்பரப்பும் சாசனமாய்த் தருவோம் என்றேன்:. . நாடு முற்றும் புகழ் கூற அவனை ராஜ நாவலனாய்ப் பிரகடனம் செய்வோம் என்றேன். ஈடுகட்டி நானென்ன இசைத்த போதும், . இளங்கவிஞன் ஒரு சிறிதும் மசிந்தா னில்லை! நலங்கைகயன் : வேடிக்கை தான் அமைச்ச? போரில் கலப்பட வெற்றியொரு பெரிதாமோ? சொல்லை நம்பிப் பாடிப் பிழைக்கு மிந்தக் கவிஞன் தன்னைப் பணிவிக்க ஏரலவில்லை! நன்றென் ஆட்சி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/23&oldid=989504" இலிருந்து மீள்விக்கப்பட்டது