இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வேங்கையன் : விரசமி தில் ஏதுமில்லை, அமைச்ச! ஈதில் வெற்றிகண்டால் அனைவருக்கும் அதுவே வெற்றி.. கரமிளியோ கலையரசி; கன்ணி. அந்தக் கவிஞனுமோர் கட்டழகன்; வீரன், ஈதில் தீமையெதும் காண்கில்லேன். இருவர் தம்மின் திறமைக்கும் இதுவொன்றே தேர்வு மாகும். இம்முயற்சி வெற்றியுடீன் நாமும் அந்த இளங்கவிஞன் தனை வெற்றி கொள்வோம். மற்றும் செம்மைநிறை காமினியாள் தனக்கும் பண்பில் சிறந்தானை மணம்முடித்த தாகும் அன்றே? அமைச்சன் : ஆம், அரசே! நீர்சொன்ன வார்த்தை உண்மை. - அதுவுமொரு யோசனைதான். வேங்கையன் : ஆமாம். இன்னே போம்; அவளை இங்கழைத்து வாகும். இந்தப் புதுப்போரில் யார்வாகை புனைவார் பார்ப்போம்! காட்சி-5 வேங்கையன் அமைச்சன் வேங்கையன் : வாரும், என்றன் நல்லமைச்ச! மாதால் வென்று வாழ்த்துரைக்க வந்தீரோ? சொல்லும் செய்தி,